தேவையான பொருட்கள்
400 கிராம் பனீர் டைமண்ட் ஷேப்பில் கட் செய்தது
200 கிராம் பெரிய வெங்காயம் நீள வாக்கில் கட் செய்தது
150கிராம் தக்காளி கட் செய்தது
8 ஏலக்காய்
4 பட்டை
8 இலவங்கம்
2பிரியாணி இலை
2 கருப்பு ஏலக்காய்
2டீஸ்பூன் சீரகம்
16 முந்திரி
2டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த் தூள்
2டீஸ்பூன் தனியாத்தூள்
1/2டீஸ்பூன் மஞ்சள்தூள்
1டீஸ்பூன் சீரகத்தூள்
1கப் தயிர்
1டீஸ்பூன் கரம் மசாலா தூள்
4டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
6 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
தேவையானஅளவு உப்பு
1/4கப் ஃப்ரெஷ் க்ரீம்
1டீஸ்பூன் சர்க்கரை
2டீஸ்பூன் கசூரிமேத்தி
4டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
செய்முறை
ஒர வாணலியில் 2டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.தயிருடன் காஷ்மீரி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.வெங்காயம் சிவக்க வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, தயிர் கலவையை ஊற்றி கலந்து, எண்ணெய் பிரிந்ததும், தக்காளி, முந்திரி சேர்த்து வதக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.இதனுடன் வெண்ணெய் சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கி ஆற விட்டு நைசாக அரைத்து வடிகட்டி வைக்கவும்.ஒரு வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சர்க்கரை சேர்த்து சர்க்கரை சிவந்ததும் மசாலா கலவையை ஊற்றி கொதிக்க விடவும். கெட்டியானதும், கரம் மசாலா தூள், கசூரிமேத்தி, பனீரை சேர்த்து மூடி 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து வேக வைக்கவும்.பின்னர் ஃப்ரெஷ் க்ரீம், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கவும். சூப்பரான ஷாஹி பனீர் மசாலா ரெடி. சப்பாத்தி, நான், புல்கா, பரோட்டா வுடன் சூப்பராக இருக்கும்.
