×

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

திருப்பூர், டிச. 31: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் சிறப்பு முகாம் வருகிற 3, 4ம் தேதி ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

சிறப்பு முகாமில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்- 6 மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயரினை நீக்கம் செய்ய படிவம்- 7, முகவரி மாற்றம் புகைப்பட மாற்றம் மற்றும் திருத்தங்கள் செய்ய படிவம்-8 ஆகியவை பூர்த்தி செய்து வழங்கி பயன்பெறலாம்.

புதிய வாக்காளர்களாக பெயர் சேர்த்திட இந்திய தேர்தல் ஆணையத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆவணங்களான பிறப்பு சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் மற்றும் பள்ளிக்கல்வி சான்றிதழ் போன்றவைகளான 13 ஆவணங்களில் ஒன்றின் நகலினை வயது, விலாசம் ஆகியவற்றுக்கான ஆதாரமாக அளிப்பதுடன் உறுதிமொழி படிவத்தினையும் பூர்த்தி செய்து வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Tiruppur ,Tiruppur Corporation ,Commissioner ,Amit ,Tiruppur South ,Assembly ,
× RELATED போலீஸ்காரரை கத்தியால் குத்த முயன்ற வாலிபர்