ஹத்ரமாவட்: ஏமனில் ஐக்கிய அரபு எமிரேட் ஆதரவுப் படைகள் மீது சவுதி நேற்று குண்டு மழை பொழிந்தது. இந்த தாக்குதலில் 7 பேர் பலியானார்கள். இதனால் அப்பகுதி போர் மண்டலமாக மாறியது. குறிப்பாக தெற்கு ஏமனில் ஐக்கிய அரபு எமிரேட் ஆதரவுப் பிரிவினைவாதப் படைகள் மீது சவுதி அரேபியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. ஐக்கிய அரபு எமிரேட் படைகள் நாட்டை விட்டு வெளியேற ஏமன் 24 மணி நேர காலக்கெடுவை விதித்திருந்தது. அதையும் மீறி படைகள் அங்கு இருந்ததால் சவுதி தாக்குதல் நடத்தியது.
