×

உத்தரப் பிரதேசதத்தில் வாட்டி வதைக்கும் கடும் குளிர்: 3 டிகிரிக்கு சரிந்த வெப்ப நிலை!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிரும், அடர் மூடுபனியும் பொதுமக்களை நிலைகுலையச் செய்துள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் குளிர் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புத்தாண்டு தினத்தில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் சூரியனைக் காண முடியாத அளவுக்கு மேகமூட்டத்துடனும், அடர் மூடுபனியுடனும் காணப்பட்டது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலையில் சற்று உயர்வு இருக்கும் என்பதால் மக்கள் சற்று நிம்மத்தியடைந்துள்ளனர். இருப்பினும், அதன் பிறகு மீண்டும் குளிர் தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இன்று உத்தரப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். இருப்பினும், மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் அடர் மூடுபனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். சுமார் 34 மாவட்டங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் அடர் மூடுபனி நிலவும் என்றும், சில இடங்களில் பார்வைத்திறன்’பூஜ்ஜியம்’ மீட்டராக இருக்கக்கூடும்’ என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், பாரபங்கி மாவட்டம் மாநிலத்திலேயே மிகக் குறைந்த வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது. அங்கு வெப்பநிலை 3.0°C ஆகக் குறைந்தது, இது இயல்பை விட 5.2 டிகிரி குறைவாகும். இது தவிர கோரக்பூர், ஹர்தோய், அயோத்தி, சுல்தான்பூர் மற்றும் ஷாஜகான்பூர் ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ்க்கு இடையே பதிவாகியுள்ளது.

Tags : Uttar Pradesh ,Lucknow ,Happy ,New Year ,
× RELATED புதுச்சேரியில் காவலர் பணியிடங்களுக்கு உடல் தகுதி தேர்வு தொடக்கம்..!!