×

ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள்.. 4 லட்சம் வேலை வாய்ப்புகள்…தொழிற்வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

சென்னை : 2025ம் ஆண்டில் மட்டும் 270 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்பட்டதுடன் 4 லட்சம் வேலை வாய்ப்புகளையும் திராவிட மாடல் ஆட்சி உருவாக்கி உள்ளதாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். 2025ம் ஆண்டில் தமிழ்நாட்டின் தொழிற் வளர்ச்சி குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், 2026ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள திராவிட மாடல் அரசின் தொழிற்புரட்சி இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 270 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்பட்டு இருப்பது இதற்கு சான்றாக அமையும் என்று குறிப்பிட்டுள்ள அவர், 4 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்பு உருவாக்கி இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

ஓரிடத்தில் மட்டும் முதலீடுகளை குவிக்காமல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக முதலீடுகள் பெறப்பட்டு இருப்பது கூடுதல் பலமாக இருப்பதாகவும் இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் சமமான வளர்ச்சி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்காலத் தொழில்துறைகள் விண்வெளி, மேம்பட்ட மின்னணு உற்பத்தி, ரயில்வே, கப்பல் கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளிலும் தமிழ்நாடு முதலீடுகளை செய்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இதற்காக தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ள கொள்கைகள் தான் ஒப்பிட முடியாத வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் 50க்கும் மேற்பட்ட புதிய உலகளாவிய திறன் மையங்கள், செமி கண்டெக்டர்கள் மிஷன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் உலகளாவிய அறிவு மையமாக தமிழ்நாடு உள்ளதா என்றும் தொழிற்வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது என்பதை விருதுகள் காட்டுவதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

Tags : Nadu ,Minister ,T.R.P. Raja ,Chennai ,Industries ,Tamil Nadu’s… ,
× RELATED கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன பேருந்தில் பயங்கர தீ விபத்து!!