×

மாவட்ட துப்பறியும் பிரிவில் புதிய மோப்ப நாய் சேர்ப்பு

தர்மபுரி, ஜன. 1: தர்மபுரி மாவட்ட மோப்பநாய் துப்பறியும் பிரிவில், புதிய மோப்ப நாய் அதிபன் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு போதை பொருள் மோப்பநாய் வழங்க, தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு கொள்முதல் செய்து, மோப்ப நாய்க்குட்டி ஒன்று வழங்கப்பட்டது. அந்த மோப்ப நாய்க்குட்டிக்கு, தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் ‘அதிபன்’ என பெயர் சூட்டப்பட்டு பயிற்சிக்கு அனுப்பப்பட்டது.

துப்பறியும் மோப்ப நாய் அதிபன், தற்போது சென்னையில் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, சுமார் 6 மாதம் அடிப்படை மற்றும் சிறப்பு பயிற்சி முடித்துள்ளது. இதையடுத்து, தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் முன்னிலையில், துப்பறியும் மோப்ப நாய் பயிற்சியாளர்கள்(காவலர்கள்) கலிமுல்லா, குருநாதன் மற்றும் மோப்ப நாய் பிரிவு போலீஸ் எஸ்ஐ லோகநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இனிமேல் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கை தொடர்பான பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

 

Tags : Dharmapuri ,Atipan ,Dharmapuri district ,Tamil Nadu ,Tamil Nadu government ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்