மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த வடமாநிலத்தவர் பரிதாப பலி

ஆவடி, ஜன.1: இன்டர்நெட் கேபிள் மூலம் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த வட மாநிலத்தை சேர்ந்தவர் பரிதாப பலியானார். ஆவடி அடுத்த பட்டாபிராம், நெமிலிச்சேரி சந்திப்பு, வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் இன்டர்நெட் கேபிள் மூலம் சாலையில் கீழே இறங்க முயற்சி செய்தார். இன்டர்நெட் கேபிள் மூலம் இறங்க முயற்சி செய்த போது, இறங்க முடியாமல் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தார். அப்போது, திடீரென கேபிள் அறுந்து கீழே விழுந்தார்.

இதில், காயமடைந்த வாலிபரை அருகே இருந்த காவல் துறையினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீலகொண்டமாஜி(40) என தெரிந்தது.  அவர் நண்பர்களுடன் மது அருந்தியபோது, அவர்கள் விட்டு சென்றதால் வழி தெரியாத அவர், மது போதையில் கேபிள் வழியாக மேம்பாலத்தில் இருந்து இறங்க முயற்சி செய்தது தெரிய வந்தது. பட்டாபிராம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: