திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் அரை நிர்வாண கோலத்தில் வடமாநில வாலிபர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், கோவை, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பஸ் நிலையம் காலை முதல் இரவு வரை பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில் இன்று பகலில் பஸ் நிலையத்திற்கு அரை நிர்வாண கோலத்தில் வந்த வடமாநில வாலிபர் ஒருவர் திடீரென அங்கும் இங்கும் ஓடினார். இதனால் பயணிகள் பலர் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர்.ஆனால் அவர் போலீஸ் பிடியில் சிக்காமல் டிமிக்கி கொடுத்தார்.

கடைசியில் அவரை மடக்கி பிடித்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். ஆனாலும் அவர் ஆம்புலன்சில் ஏற மறுத்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் மத்திய பஸ் நிலையத்தில் இன்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: