×

தமிழகம் முழுவதும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு!!!

சென்னை : புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில், தமிழ்நாடு முழுவதும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சில அதிகாரிகளுக்குப் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

*ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று Armed Force DGPயாக நியமிக்கப்பட்டுள்ளார்.

*ஏடிஜிபி சந்தீப் மிட்டல் சைபர் கிரைம் டி.ஜி.பி. ஆகவும், ஏடிஜிபி பால நாகதேவி பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.ஜி.பி. ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

*சிபிசிஐடி ஐஜி அன்பு, சிபிசிஐடி ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.ஆவடி கமிஷனர் சங்கர் மற்றும் தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மொடாக் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

*தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ்வர் தயாள் நியமிக்கப்பட்டுள்ளார்.

*தாம்பரம் காவல் ஆணையராக ஏடிஜிபி அமல்ராஜ் பொறுப்பேற்றுள்ளார். மகேஸ்வர் தயாள் அவர்கள் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பேற்றுள்ளார்.

*பிரேம் ஆனந்த் சின்ஹா ஆவடி போலீஸ் கமிஷனராகவும், தீபக் எம்.தாமோர் மத்திய அரசு பணிக்கான ஏடிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

*செந்தில்குமார் தலைமையிட ஏடிஜிபியாகவும், அனிசா உசேன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

*நஜ்முல் ஹோடா சென்னை செயல்பாடுகள் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

*மகேந்தர் குமார் ரத்தோட் காவல்துறை தலைமையக ஏடிஜிபியாகவும், கே.சங்கர் சிறைத்துறை ஏடிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

*அமல்ராஜ் தாம்பரம் போலீஸ் கமிஷனராகவும், அபின் தினேஷ் மோடாக் அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

*தினகரன் வண்டலூர் தமிழக போலீஸ் பயிற்சி அகாடமி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாதவன் திருநெல்வேலி மாநகரம் மேற்கு மண்டல துணை கமிஷனராகவும், மதிவாணன் மதுரை மாநகரம் வடக்கு மண்டல துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

*பாண்டியராஜன் தமிழ்நாடு சிறப்பு காவல் படை எஸ்பியாகவும், மகேஸ்வரி தமிழக கமாண்டோ படை எஸ்பியாகவும் பொறுப்பேற்றுள்ளனர். கார்த்திக் குமார் பள்ளிக்கரணை தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,ADGB ,Davidson Devasirvatham ,DGP ,Chennai ,New Year ,Davidson ,Armed Force ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,00,400-க்கு விற்பனை!