பல்லடம், டிச.22: பொங்கலூர் காவல் நிலையத்தை இன்று முதல்வர் திறந்து வைக்கிறார். திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக உதயமாகியுள்ள பொங்கலூர் காவல் நிலையம் இன்று 22-ம் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.
உகாயனூர், பொங்கலூர், மாதப்பூர், காட்டூர், வடமலைபாளையம், வே.கள்ளிப்பாளையம் ஆகிய 6 ஊராட்சிகள் பொங்கலூர் காவல் நிலையத்தின் கீழ் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலூர் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தில் காவல் நிலையம் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.
