×

ஊட்டி அருகே சிறுத்தைகள் நடமாட்டத்தால் மக்கள் பீதி

ஊட்டி: நீலகிரி வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. சமீபகாலமாக மாவட்டம் முழுவதும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தை தெருவில் சுற்றித்திரியும் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வருகின்றன. இந்நிலையில் ஊட்டி அருகேயுள்ள கரிமொராஹட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு அருகே இரு சிறுத்தைகள் உலா வந்தன. இதில் ஒன்று கருஞ்சிறுத்தை ஆகும்.

இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியை ஒட்டிய சாலையில் சிறுத்தை சுற்றி திரிந்ததால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

Tags : Ooty ,Nilgiris ,Karimorahatti ,Ooty… ,
× RELATED ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில்...