×

தனிப்பட்ட காரணங்களால் WPL தொடரிலிருந்து விலகினார் எல்லிஸ் பெர்ரி!

பெங்களூரு: மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் நான்காவது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

WPL 2026 தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி மற்றும் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. விறுவிறுப்பான இந்தத் தொடக்க ஆட்டத்திற்கு முன்பாகவே பெர்ரியின் விலகல் செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த காலங்களில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஆர்சிபி அணியின் தூணாக விளங்கியவர் பெர்ரி. அவரது அனுபவம் இல்லாதது அணிக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லிஸ் பெர்ரிக்கு மாற்றாக எந்த வீராங்கனை அணியில் சேர்க்கப்படுவார் என்பதை ஆர்சிபி நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Tags : Ellis Perry ,WPL ,Bangalore ,Women's Premier League ,Royal Challengers ,
× RELATED எஸ்ஏ டி20 தொடர்; பிரிட்டோரியா கேபிடல்ஸை...