×

விஜயகாந்த் 2ம் ஆண்டு குரு பூஜை நினைவஞ்சலி செலுத்திய தலைவர்களுக்கு நன்றி: பிரேமலதா அறிக்கை

சென்னை: விஜயகாந்தின் குரு பூஜையில் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்திய அரசியல் கட்சி தலைவர்களுக்கு பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார். தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் பெருந்திரளாகக் கூடி அஞ்சலி செலுத்தினர். மேலும் பலர் அறிக்கைகள் மூலம் நினைவஞ்சலி செலுத்தினர். நேரில் கலந்துகொண்டவர்கள் மற்றும் நினைவு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பெரும் திரளாக திரண்டு வந்து விஜயகாந்தின் 2ம் ஆண்டு குரு பூஜையில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. மேலும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அந்த கட்சியின் நிர்வாகிகள், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜ முன்னாள் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜ நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்பி விஜய்வசந்த், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேமுதிக சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், தேமுதிக டிவிட்டர் தளத்தில் நினைவு அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக எம்பி கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு, டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்எல்ஏ, அமமுக டிடிவி.தினகரன், விசிக தலைவர் திருமாவளவன், புரட்சி பாரதம் கட்சி பூவை ஜெகன்மூர்த்தி, பாமக முன்னாள் எம்பி அன்புமணி, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார், சிம்பு மற்றும் அனைவருக்கும் தேமுதிக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Vijayakanth ,Guru ,Premalatha ,Chennai ,Guru Puja ,DMDK ,Tamil Nadu ,Koyambedu, Chennai ,
× RELATED திருப்படி திருவிழாவை ஒட்டி திருத்தணி...