- சென்னை
- சர்வதேச இளைஞர் பூக்கடை
- ஜூனியர் ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பை
- மதுரா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: சமீபத்தில், சென்னை மற்றும் மதுரையில் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை தமிழ்நாடு – 2025 போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் வரும் ஜனவரி 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை பல்வேறு வகையிலான படகுப்போட்டிகள், பாய்மர பலகை சறுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் இந்தியா, அயர்லாந்து, சீசெல்ஸ், மொரீசியஸ், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அல்ஜீரியா, இலங்கை, மலேசியா, தைவான், ஸ்வீடன், ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகிய 13 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
தவிர, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் 5150 டிரையத்லான் சென்னை – 2026 போட்டியையொட்டி 1.50 கி.மீ நீச்சல், 40 கி.மீ சைக்கிளிங், 10 கி.மீ ஓட்டம் என மொத்தம் 51.50 கி.மீ தூரம் கொண்ட இரும்பு மனிதன் 5150 டிரையத்லான் போட்டி, சென்னையில் வரும் ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க 1,200க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த இரு போட்டிகளையும் சிறப்பாக நடத்தி தமிழ்நாட்டின் பெருமையை உலகறிய செய்யும் வகையில் போக்குவரத்து, பாதுகாப்பு, அவசர மருத்துவ சேவைகள், தங்குமிட வசதி, வீரர்களுக்கான போக்குவரத்து உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து துணை முதல்வர் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
