100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் புதிய சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்: முத்தரசன் பேட்டி

தஞ்சாவூர்: தஞ்சையில் நேற்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம், மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தேசிய கட்டுப்பாடு குழு உறுப்பினர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி , திட்டத்தையே நிர்மூலமாக்கிவிட்டனர்.

எந்த நோக்கத்திற்காக அந்த திட்டம் கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கமே சிதறடிக்கக் கூடிய வகையில் அந்த திட்டத்தை பால்படுத்தக்கூடிய நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். புதிய திட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். மகாத்மா காந்தி வேலை உறுதிப்பு திட்டத்தை சீர்குலைத்தவர்கள் தீய சக்தி இல்லை.

நாடு முழுவதும் இருக்கிற 30 கோடி தொழிலாளர்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்திருக்கிறவர்கள் தீய சக்தி இல்லை. ஆனால் அதை எதிர்த்து போராடுகிற ஒரு கட்சியே தீய சக்தி என்று ஒருவர் சொல்லுகிறார். கல்விக்காக கொடுக்க வேண்டிய நிதி 2500 கோடி ரூபாய் கொடுக்க வில்லை. அது தீய சக்தி என்று அவருக்கு தெரியவில்லை. ஆகவே எது தீயது, எது நல்லது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி நிறைய இடங்களில் நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: