×

திருவாரூரில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவு உட்பட அனைத்து செலவையும் அரசே ஏற்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பெற்றோர் இருவரையும் இழந்து தவிக்கும் 3 குழந்தைகள் வைத்த கோரிக்கையை ஏற்று அவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும், வீடு கட்டித் தருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பெற்றோரை இழந்த 3 குழந்தைகளிடமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் பேசி ஆறுதல் கூறினார்.

Tags : Thiruvarur ,Chief Minister ,M.K. Stalin ,Koothanallur ,
× RELATED தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும்...