×

அன்புமணியுடன் பாமக பெயரில் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது: கூட்டணி பேச்சு நடத்தும் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பு எச்சரிக்கை

சென்னை: எந்த அரசியல் கட்சியும் தனிநபரும், அமைப்பும் அன்புமணியுடன் பாமக பெயரில் அரசியல், தேர்தல், நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என அன்புமணியுடன் கூட்டணி பேச்சு நடத்தும் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ராமதாஸ் தரப்பு டிசம்பர் 29ம் தேதி சேலத்தில் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பொதுக்குழுவில் ராமதாஸ், பாமக கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

சேலத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழுவுக்கு அனுமதி தரக் கூடாது என கட்சியின் தலைவா் அன்புமணி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனா்.பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரையோ, அதன் கொடியையோ, அடையாளங் களையோ தவறாக பயன்படுத்தும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமதாஸ் தலைமையில் நடைபெறும் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எதுவும் செல்லாது என தெரிவித்தாா்

இந்த நிலையில், பாமகவின் சமூகநீதிப் பேரவை தரப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் வெளியிட்டுள்ள எச்சரிக்கை நோட்டீஸில், அன்புமணியுடன் பாமக பெயரில் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது.அன்புமணிக்கு பாமக தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், சின்னம், கொடியை பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்று சென்னை, டெல்லி உயர்நீதிமன்றங்களின் தீர்ப்பு மூலம் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறுபவர்கள் மீது அவமதிப்பு வழக்கு உள்பட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

Tags : PMK ,Anbumani ,Ramadoss ,Chennai ,
× RELATED பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் சென்னை –...