திருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜையையொட்டி இன்று(டிச.26) 32,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஆன்லைனில் 30,000 பேருக்கும், நேரடியாக வருவோரில் 2,000 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக நாள்தோறும் 70,000 பேர் முதல் 80,000 பேர் வரை அனுமதிக்கப்படும் நிலையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன.
