×

சேலம் அருகே இன்று அதிகாலை ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: ரூ.பல லட்சம் பொருட்கள் சேதம்

 

சேலம்: சேலம் எருமாபாளையம் அருகே ஊதுபத்தி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. சேலம் அடுத்த எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நஷீர் (36). இவர் அப்பகுதியில் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு கப் சாம்பிராணி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, ஊதுபத்தி உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து, சேலம் மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று மாலை வழக்கம் போல் பணியை முடித்து விட்டு தொழிற்சாலையை மூடிச்சென்றனர்.

இதனிடையே இன்று காலை 6மணிக்கு திடீரென ஊதுபத்தி தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்திலேயே தீப்பற்றி மளமளவௌ பற்றி எரியத்தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து ஜெசிபி பொக்லைன் மூலம் பொருட்கள் வௌியேற்றப்பட்டு முழுமையாக தீ அணைக்கப்பட்டது.

இருப்பினும் தொழிற்சாலையில் இருந்த ஊதுபத்தி தயாரிப்பு, பேக்கிங் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

Tags : Udupatti factory ,Salem ,Oudupati ,Salem Buffalo ,Nasheer ,Buffalo ,
× RELATED சென்னை மாநகர காவல்துறையின் காவல் கரங்கள் சார்பில் 6,130 சடலங்கள் நல்லடக்கம்