சென்னை: பிறப்பிட சான்றிதழை இணையதளம் மூலம் பெறுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. மண்டல துணை தாசில்தார்கள் மற்றும் தாலுகா துணை தாசில்தார்கள் கையால் கையெழுத்திட்டு சான்றிதழ்களை வழங்கலாம். இன்று முதல் அடுத்த மாதம் 25ம் தேதி வரை இணையதளம் மூலம் பெறுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது.
