×

6 நாள் மதுபோதையில் மிதந்த இங்கி வீரர்கள்

அடிலெய்ட்: ஆஸ்திரேலியா அணியுடனான ஆஷஸ் தொடரை, இங்கிலாந்து அணி, 3-0 என்ற கணக்கில் மிக மோசமான முறையில் இழந்தது. இந்நிலையில், 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகளுக்கு இடையிலான 9 நாட்களில் இங்கிலாந்தை சேர்ந்த பல வீரர்கள், 6 நாட்களாக எந்நேரமும் குடிபோதையில் இருந்துள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இந்த செய்தி, இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரியளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் தொடரின்போது விளையாட்டில் கவனம் செலுத்தாமல் குடிபோதையில் மிதந்த வீரர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

Tags : England ,Adelaide ,Ashes ,Australia ,
× RELATED இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20...