திருவனந்தபுரம்: கேரளாவில் கோழி, வாத்து, காடைகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் ஏராளமான கோழி, வாத்து, காடைகள் திடீர் திடீரென செத்து விழுந்தன. இதுகுறித்து அறிந்த கால்நடை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அங்கு சென்று இறந்த பறவைகளின் ரத்த மாதிரியை சேகரித்து பூனாவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதில் உயிரிழந்த பறவைகளுக்கு எச் 1 என் 1 பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பறவை இறைச்சி மற்றும் முட்டை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
