சென்னை: தவெகவில் அடுத்தடுத்து வெடிக்கும் அதிருப்தியால் அக்கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு அதிருப்தியாளர்கள் வருகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் வந்த அதிருப்தியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருந்த அஜிதா ஆக்னல் கண்ணீருடன் காத்திருக்கிறார். ஏற்கனவே திருவள்ளூர் மாவட்ட தவெகவினர் அதிருப்தியில் இருந்த நிலையில் தற்போது தூத்துக்குடி, திருச்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
