சென்னை: ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சொந்த ஊர் செல்ல தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாததால் அவதி அடைந்தனர். தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற பயணிகளுக்கு error என்று மட்டும் திரையில் தோன்றியது. ஒவ்வொரு முறை தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிக்கும்போதும் இணையதளம் முடக்கம் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இடைத்தரகர்களுக்காக மட்டும் தட்கல் டிக்கெட் முறை செயல்படுவதாக சமூக வலைதளத்தில் சிலர் காட்டமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தட்கல் முன்பதிவு செய்யும்போதெல்லாம் error என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் வருவது ஏன் என்று பயணிகள் கேள்வி எழுப்பப்பட்டது. ஐஆர்சிடிசி இணையதளம் 99.98% சதவீதம் சிறப்பாக செயல்படுவதாக ரயில்வே அமைச்சகம் கூறியிருந்த நிலையில் தட்கல் முன்பதிவு முடங்கியது. சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு ஐஆர்சிடிசி இணையதளம் சீரடைந்தது. தட்கல் டிக்கெட் விற்று தீர்ந்ததால் 10 நிமிடங்களுக்கு பிறகு ஐஆர்சிடிசி இணையதளம் சீரடைந்தாலும் பயணிகளுக்கு பயனில்லை என தெரிவிக்கின்றனர்.
