சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் 3 அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

