பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது வாணியம்பாடி போலீசில் புகார்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆனந்தனிடம் நேற்று வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா மாவட்டத் தலைவர் பசி அக்கரம் தலைமையில், பெண்கள் நீதியமைப்பு குழுவினர் இணைந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது புகார் மனு அளித்தனர். அதில், கடந்த ‘15ம் தேதி பீகார் மாநிலத்தில் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கியபோது இஸ்லாமிய சமுதாய பெண் மருத்துவர் நுஸ்ரத் பர்வீன் முகத்தில் அணிந்திருந்த பர்தாவை இழுத்த சம்பவம் மத சுதந்திரத்திற்கு எதிரானது. பெண்களின் தனிப்பட்ட உரிமைகளுக்கு விரோதமானது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்பதால் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories: