சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: பணி நிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 மாத காலமாக பல்வேறு போராட்டங்களை ஒப்பந்த செவிலியர்கள் நடத்தி வந்தனர். தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களையும் உடனே பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கான அனைத்து பலன்களையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
