×

ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் டிசம்பர்.24ல் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

 

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் டிசம்பர்.24ல் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவப்படுவதால் பாதுகாப்பு கருதி டிசம்பர்.24ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், பழவேற்காடு கடல் பகுதிக்கு அருகில் அமைந்து உள்ளது.

விண்ணில் ராக்கெட் ஏவப்படும் மற்றும் சோதனை பணிகள் மேற்கொள்ளும் காலங்களில், பாதுகாப்பு கருதியும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டும் பழவேற்காடு கடல் பகுதியில், குறிப்பிட்ட சுற்றளவிற்கு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், 24ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி, பழவேற்காடு மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூா் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவ நலத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags : Sriharikota ,Fishermen ,Andhra Pradesh, Sriharikota Satish… ,
× RELATED தமிழகத்தில் வாக்காளர் பட்டியல்...