- தேசிய மின்சார பாதுகாப்பு வார கொண்டாட்ட பேரணி
- திருப்பூர்
- தமிழ்நாடு மின்சார விநியோகக் கழகம்
- திருப்பூர் மின்சார பகிர்மான வட்டம்
- அரசு கலைகள்
- கல்லூரி
- சிக்கன்னா
- கல்லூரி சாலை
திருப்பூர், டிச.20: தேசிய மின் சிக்கன வார விழா பேரணி தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் திருப்பூர் மின் பகிர்மான வட்டம் சார்பில் நேற்று ரயில் நிலையத்தில் துவங்கி காலேஜ் ரோடு வழியாக சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நிறைவு பெற்றது. இந்த பேரணியை திருப்பூர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சுமதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முடிவில் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு மின் சிக்கன விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மின்வாரிய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
