அவிநாசி, டிச. 20: அவிநாசி அருகே பெருமாநல்லூரில் வசித்து வருபவர் முருகேசன் மகன் தர் (27). நேற்று அதிகாலை இவரது மனைவி அனுசுயா மற்றும் கைக்குழந்தையுடன் வீட்டை பூட்டிவிட்டு சொந்த வேலையாக ஈரோட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று காலை 11 மணியளவில் திடீரென வீட்டில் தீப்பிடித்து எரிந்தது வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்த அருகில் இருந்தவர்கல் தீயை அணைக்க முயன்றனர் ஆனால் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அணைத்தும் தீயில் கருகி சாம்பலாயின. வீட்டில் இருந்த பிரிட்ஜில் மின்கசிவு ஏற்பட்தால் தீவிபத்து ஏற்பட்டது என விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
