×

டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!!

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் குறித்து வரும் டிசம்பர் 22 ஆம் தேதி பேச்சு வரத்தை நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்ககளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் டிசம்பர் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆலோனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu government ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பல்வேறு...