×

கோவை மாவட்டத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை, டிச.19: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்தது. பணிகள் கடந்த 14ம் தேதி நிறைவு பெற்றது. மாவட்ட அளவில் சுமார் 6 லட்சம் பேர் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தனர். இதில் சுமார் 1 லட்சம் பட்டியலில் இடம் பெறவில்லை என தெரிகிறது. இன்று (19ம் தேதி) காலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடவுள்ளது. கலெக்டர் பவன்குமார், அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் இந்த பட்டியலை வெளியிடவுள்ளார்.

மாவட்ட அளவில் சட்டமன்ற தொகுதி வாரியாக இறந்தவர்கள், நீக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் www.https://coimbatore.nic.in என்ற வெப்சைட்டில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாவட்ட வாரியாக தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் 3117 ஓட்டு சாவடிக்குட்பட்ட வாக்காளர்கள் விவரங்கள் இதில் வெளியாகும்.
மாவட்ட அளவில் ஓட்டு சாவடி வாரியாக ஆப்சென்ட், இறப்பு, முகவரி மாறியவர்கள், இதர வகைப்பாட்டில் உள்ளவர்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்படும். மேலும் 19ம் தேதிக்கு பிறகு முகவரி மாறியவர்கள், வீடுகளில் இல்லாதவர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவர். உரிய படிவம் வழங்கி தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். வேறு பகுதிக்கு இடம் மாறியவர்கள் அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து தரலாம் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

Tags : Coimbatore district ,Coimbatore ,Revision ,SIR ,Kaundampalayam… ,
× RELATED சூலூரில் மாணவியிடம் பேசியதால்...