×

புதிதாக கட்சி ஆரம்பித்து நிறைய பேர் காணாமல் போய் இருக்கிறார்கள் கே.வி.குப்பத்தில் நயினார் நாகேந்திரன் பேச்சு

கே.வி.குப்பம், டிச.19: பாஜக சார்பில் தமிழக முழுவதும் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் அக்கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தலைமையில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்று வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகே சந்தைமேடு பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது போக்குவரத்து நெரிசல் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாம்பழ தொழிற்சாலை அமைக்க வேண்டும், பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும், தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதற்கு பதில் அளித்து நையினார் நாகேந்திரன் ேபசியதாவது: பாலாறு பாழடைந்த ஆறாக மாறி உள்ளது. ஜூலைக்குப் பிறகு இந்த பகுதியில் சிப்காட் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். புதிதாக கட்சி ஆரம்பித்து நிறைய பேர் வருவார்கள். அவர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். உங்கள் வாக்கு வீணாக கூடாது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணி பார்க்க வேண்டும் என்றார். இந்த நிகழ்வின்போது கே.வி.குப்பம் தொகுதி பா.ஜ. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Nainar Nagendran ,K.V.Kuppam. ,K.V.Kuppam ,Tamil Nadu ,BJP ,president ,Vellore ,
× RELATED கடை ஞாயிறு விழாவில் ரூ.4.15 லட்சம்...