×

மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் நாளைக்குள் செலுத்த வேண்டும் அதிகாரிகள் தகவல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்

வேலூர், டிச.18: தமிழகத்தில் நடப்பு 2025-2026ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை நாளைக்குள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு நடப்பு 2025-2026ம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் உத்தேச பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், விலக்கு அளிக்கப்பட்டுள்ள மாணவர்களை தவிர்த்து, பிற மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை வரும் 19ம் தேதி நாளைக்குள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் நடப்பு 2025-2026ம் கல்வியாண்டிற்கான பிளஸ் 1 அரியர் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களிடமிருந்து தேர்வுக் கட்டணத் தொகையினை பெற்று, அத்தொகையினை https://dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அனைத்து தேர்வர்களையும் தேர்வு செய்து, செலுத்த வேண்டிய மொத்த கட்டணத் தொகையினை ஆன்லைன் வாயிலாக வரும் 19ம் தேதி நாளைக்குள் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தை பொறுத்தவரை, ஒரு மாணவருக்கு செய்முறை கொண்ட பாடங்கள் அடங்கிய பாடத்தொகுப்பில் பயில்வோருக்கு ரூ.225 மற்றும் செய்முறை இல்லாத பாடங்கள் அடங்கிய பாடத்தொகுப்பில் பயில்வோருக்கு ரூ.175 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொழியாகக் கொண்டு தேர்வெழுதும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு இதில், தமிழை பயிற்று உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழி தவிர, இதர பயிற்று மொழிகளில் பயிலும் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் எம்பிசி ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், பிசி, பிசி முஸ்லீம் ஆகியோரில் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. அனைத்துப்பள்ளிகளிலும் பயிலும் பார்வை குறைபாடுடைய மற்றும் செவித்திறன், பேச் சுத்திறன் குறைபாடுடைய மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

பிளஸ் 1 அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ரூ.50 மற்றும் இதரக் கட்டணமாக ரூ.35 செலுத்த வேண்டும். அரியர் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து எவ்வித விலக்கும் இல்லை. 2025-2026 ஆண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வின் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்காக, அனைத்துப் பள்ளிகளும் (எந்த ஒரு பள்ளியும் விலக்கு இல்லாமல்) ரூ.300 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமாக கட்டணங்கள் செலுத்துவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளரை தொடர்பு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore ,Tamil Nadu ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ெகாடுத்த...