- ஐரோப்பிய ஒன்றிய
- அமைச்சர்
- எல்.முருகன்
- புது தில்லி
- இன்டர்ஃபேஸ் மென்பொருள்
- செல்வி
- இணைய அமைச்சர்
- ஆகாஷவனி
- துர்தர்ஷன்
புதுடெல்லி: மக்களவையில் திமுக உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் கேள்விக்கு ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் அளித்த பதில்:
2021-26-ல் ஒலிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.2,539 கோடி மதிப்பில் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் ஆகாஷ்வாணி மற்றும் தூர்தர்ஷன் நிலையங்களை விரிவாக்கம், நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. ஊரகம், கடலோரம், மலைப்பகுதி மற்றும் எல்லைப்பகுதிகளில் ஒலிபரப்பை விரிவுபடுத்தும் வகையில், டிரான்ஸ்மீட்டர்களைப் புதுப்பித்தல், எஃப்எம் சேவைகள் விரிவாக்கம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் , ராமேஸ்வரத்தில் 20 கிலோவாட் எஃப்எம் டிரான்ஸ்மீட்டர் செயல்பாடு, சேலம், வேலூரில் 5 கிலோவாட் எஃப்எம் டிரான்ஸ்மீட்டர் மற்றும் கும்பகோணத்தில் 10 கிலோவாட் எஃப்எம் டிரான்ஸ்மீட்டர் நிறுவுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில், மெய்நிகர் வானொலி முறையை நிறுவுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தூர்தர்ஷன் நிலையத்தில் நிகழ்ச்சி தயாரிப்புக்கான வசதிகளை எச்டி தரத்திற்கு நவீனப்படுத்துதல், புதிய நிகழ்ச்சித் தயாரிப்பு உபகரணங்களை நிறுவுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
