யு-19 ஆசிய கோப்பை ஓடிஐ: ஆட்டிப்படைத்த ஆப்கானிஸ்தான்; மோசமாக தோற்ற நேபாளம்

துபாய்: ஆசிய கோப்பை ஒரு நாள் போட்டியில் நேற்று, நேபாளத்தை, ஆப்கானிஸ்தான் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. துபாயில், 19 வயதுக்கு உட்பட்டோர் மோதும் ஆசிய கோப்பை ஒரு நாள் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஒரு போட்டியில் நேபாளம்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. துவக்க வீரர்கள் ஷாஹில் படேல் 1, நிராஜ் குமார் யாதவ் 8 ரன்னில் அவுட்டாகி மோசமான துவக்கத்தை தந்தனர். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல், பின் வந்த வீரர்களும் சொதப்பலாக ஆடியதால், நேபாளம், 46.4 ஓவரில் 124 ரன் எடுத்து ஆல் அவுட்டானது.

ஆப்கன் தரப்பில், ஸைதுல்லா ஷாகீன் 3, அப்துல் அஸிஸ், நூரிஸ்தானி ஓமர்ஸாய், வஹிதுல்லா ஜாட்ரன் தலா 2 விக்கெட் சாய்த்தனர். பின்னர் 125 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் ஓஸ்மான் சதாத் 28, பைசல் ஷினோஸதா 13, பின் வந்த நஸிபுல்லா அமிரி 0 ரன்னில் அவுட்டாகினர்.

இருப்பினும், 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய உஸைருல்லா நியாஸாய் பொறுப்புடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 59 பந்துகளில் 61 ரன் குவித்தார். அதனால் ஆப்கானிஸ்தான் 26.5 ஓவர்களிலேயே, 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இந்த தொடரில், ஒரு போட்டியில் இரு அணிகளும் எடுத்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவே.

Related Stories: