கடலூர், டிச. 18: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீசார், காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள மறைவான இடத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த இடத்திற்கு போலீசார் சென்றனர். போலீசாரை கண்டவுடன் கும்பல் தப்பியோட முயன்றது. இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நத்தவெளியை சேர்ந்த கார்த்திகேயன்(40), கருணாகரன்(37), காந்த் என்கிற சந்தோஷ்குமார்(30), பழனி(40), லோகு(35) என தெரியவந்தது. இதன் பின்னர், பிடிபட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.450 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
