×

லக்னோவில் இன்று 4வது டி.20 போட்டி; வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா இந்தியா? மல்லுகட்ட தென்ஆப்ரிக்காவும் வெயிட்டிங்!

 

லக்னோ: இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே 5 போட்டி கொண்ட டி.20 தொடர் நடந்து வருகிறது. இதில் கட்டாக்கில் நடந்த முதல் மற்றும் தர்மசாலாவில் நடந்த 3வது போட்டியில் இந்தியாவும், சண்டிகரில் நடந்த 2வது போட்டியில் தென்ஆப்ரிக்காவும் வெற்றிபெற்றன. 4வது போட்டி இன்று லக்னோவில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது. நடப்பு உலக சாம்பியனும், நம்பர் 1 அணியாகவும் உள்ள இந்தியா இன்று வெற்றிபெற்றால் தொடர்ச்சியாக 14வது டி.20 தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும். கேப்டன் சூர்யகுமார், சுப்மன் கில் பார்மில் இல்லாததால் விவாதங்கள் எழுந்துள்ளது. அபிஷேக் சர்மாவின் அதிரடியான தொடக்கம் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது. மிடில்ஆர்டரில் திலக்வர்மா, ஹர்திக் பாண்டியா வலுசேர்க்கின்றனர். பவுலிங்கில் அர்தீப் சிங், வருண்சக்ரவர்த்தி சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

உடல் நலக்குறைவால் அக்சர் பட்டேல் தொடரில் இருந்து விலகி விட்டார்., உறவினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால் மும்பை சென்ற பும்ரா 3வது போட்டியில் ஆடவில்லை. இன்றும் அவர் களம் இறங்க வாய்ப்பு இல்லை. இதனால் 3வது போட்டியில் களம் இறங்கிய இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.
மறுபுறம் தென்ஆப்ரிக்கா இன்று வெற்றிபெற்று இந்தியா தொடரை கைப்பற்றுவதற்கு முட்டுக்கட்டை போடும் திட்டத்தில் களம் காண்கிறது. பேட்டிங்கில் டிகாக், கேப்டன் மார்க்ரம்மை தவிர மற்ற யாரும் பெரிய ஸ்கோர் அடிக்க வில்லை. அதிரடி வீரர்களான டெவால்ட் பிரெவிஸ், டேவிட் மில்லர் ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பவுலிங்கில் மார்கோ ஜான்சன், லுங்கி நிகிடி, பார்ட்மேன் வேகத்தில் இந்தியாவுக்கு நெருக்கடிஅளிக்கலாம். ஜார்ஜ் லிண்டேவுக்கு பதிலாக சேகவ் மகாராஜ் அல்லது அன்ரிச் நார்ட்ஜே இடம் பெறக்கூடும். இன்று இரவு 7 மணிக்கு போட்டிதொடங்குகிறது.

 

Tags : 4th T20 ,Lucknow ,India ,South Africa ,T20 ,Cuttack ,Dharamsala ,Chandigarh ,
× RELATED லக்னோவில் கடும் பனிமூட்டம் காரணமாக...