×

ஆஷஸ் 3வது டெஸ்ட்; கவாஜா, கேரி அரைசதம்; ஆஸி. நிதான ஆட்டம்: ஐபிஎல்லில் ரூ.25.20 கோடிக்கு ஏலம் போன கிரீன் டக்அவுட்

 

அடிலெய்ட்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதல் 2 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று 2-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் 3வது டெஸ்ட் அடிலெய்ட்டில் இன்று தொடங்கியது. முதுகுதண்டுவட காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ், அணிக்கு திரும்பினார். முதல் 2 போட்டியில் அணியை வழிநடத்திய ஸ்டீவன் ஸ்மித் தலைச்சுற்றல் அறிகுறியால் இந்தடெஸ்ட்டில் ஆடவில்லை. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் விக்கெட்டிற்கு 33 ரன் எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட் 10 ரன்னில் பிரைடன் கார்ஸ் பந்தில் அவுட் ஆனார்.

ஜேக் வெதர்ரால்ட் 18, லாபுசாக்னே 19 ரன்னில் சோப்ரா ஆர்ச்சர் பந்தில் கேடச் ஆகினர். ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக ரூ.25.20 கோடிக்கு ஏலம்எடுக்கப்பட்ட கேமரூன் கிரீன், ஆர்ச்சர் பந்தில்டக் அவுட் ஆனார். 94 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில் உஸ்மான் கவாஜா-அலெக்ஸ் கேரி பொறுப்பாக ஆடினர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில், கவாஜா 82 ரன்னில் வில்ஜாக் பந்தில் அவுட் ஆனார். 53 ஓவரில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன் எடுத்திருந்தது. அலெக்ஸ் கேரி 52, ஜோஸ் இங்கிலிஸ் 10 ரன்னில் களத்தில் இருந்தனர்.

 

Tags : Ashes ,Kawaja ,Gary Halfway ,Aussie ,Green ,Duckout ,IPL ,Adelaide ,Ashes Test ,Australia ,England ,
× RELATED 4வது டி20 கிரிக்கெட்: இந்தியா-தெ.ஆப்ரிக்கா மோதல்