×

தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட நைட் கிளப் உரிமையாளர்கள் டெல்லியில் கைது

பனாஜி: கோவாவில் 25 பேரை பலி வாங்கிய நைட் கிளப் தீ விபத்தில் உரிமையாளர்கள் சவுரப் மற்றும் கவுரவ் லூத்ரா ஆகியோர் தாய்லாந்தின் புகெட் பகுதிக்கு தப்பிச்சென்றனர். அவர்களுக்கு எதிராக இன்டர்போல் அதிகாரிகள் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தனர். இது குறித்து தாய்லாந்து அதிகாரிகளிடம் இந்திய தூதரகம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில் நைட் கிளப் உரிமையாளர்கள் இரண்டு பேரையும் கடந்த 11ம் தேதி தாய்லாந்து காவல்துறை கைது செய்தது. உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு பின் இருவரும் தாய்லாந்தில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். டெல்லி விமான நிலையத்தை நேற்று வந்தடைந்தவுடன் இருவரும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இருவரும் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags : Thailand ,Delhi ,Panaji ,Saurabh ,Gaurav Luthra ,Phuket ,Goa ,Interpol ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் வன்முறை...