- ஸ்டாலின்
- பொன்னமராவதி
- குடுமியான்மலை அரசு வேளாண்மை
- தேனிமலை எஸ்.எஸ்.ஆர் பாலிடெக்னிக் கல்லூரி
- புதுக்கோட்டை
பொன்னமராவதி, டிச.16: பொன்னமராவதி அருகே நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவ முகாமில் குடுமியான்மலை அரசு வேளாண் மாணவிகள் சேவை பணிகளில் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை எஸ்எஸ்ஆர்பாலிடெக்னிக் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவிகள் சாருமதி, தலைமையிலான மாணவிகள் தங்களின் கிராமப்புற வேளாண்பணி அனுபவத்திட்டதின் ஓர்அங்கமான பொன்னமராவதி பகுதியில் தங்கியுள்ள மாணவிகள் தேனிமலை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் மருத்துவர்கள் ஒத்துழைப்புடன் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட சுற்றுவட்டார பகுதியிலுள்ள 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முகாம் சார்ந்த அறையில் அழைத்து சென்று விடுவது, மாற்றுத்திறனாளிகள், முதியோர்களின் கைகளை பிடித்து உதவுவது போன்ற சமூக சேவை பணியில் ஈடுபட்டனர்.
இவர்களின் சேவையினை தாசில்தார்சாந்தா,வட்டார மருத்துவ அலுவலர்அருள்மணிநாகராஜன், ஒன்றிய ஆணையர்கள் பாலசுப்பிரமணியன், வெங்கடேசன் மற்றம் பொதுமக்கள் பாராட்டினர். இதில் குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் கோபிகா, அகல்யா,அபிராமி, சாருபாலா, சபரினா, ஸ்ரேயா, லெட்சுமி நந்தா, லக்சுமி உன்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
