×

அதீத பனி மூட்டத்தின்போது பாதுகாப்பான விமான சேவை அளிப்பது எப்படி?

திருச்சி, டிச.16: அதீத பணி ஏற்படும்போது எவ்வாறு பாதுகாப்பான விமான சேவை அளிப்பது குறித்தான ஆலோசனைக் கூட்டம் நேற்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் ராஜு தலைமையில் நடைபெற்றது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் இரண்டாவது அதிகமான பயணிகளை கையாளும் விமான நிலையமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் தற்போது செயல்பட்டு வருகிறது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச அளவிலான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று அதிக பனிமூட்டத்தின் போது விமானங்களை விமான சேவைகளை எவ்வாறு தொய்வின்றி அளிப்பது, அதிக பணி மூட்டத்தினால் தெளிவான காட்சிகள் தெரியாத நேரங்களில் எவ்வாறு பயணிகள் பாதுகாப்பை சரியாக கையாள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தான ஆய்வு கூட்டம் நேற்று திருச்சி சர்வதேச விமான நிலைய கூட்ட அரங்கில் விமான நிலைய இயக்குனர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களின் மேலாளர்கள், விமான நிலைய அதிகாரிகள் உட்பட கலந்து கொண்டனர்.

Tags : Trichy ,Trichy International Airport ,Airport Director ,Raju ,
× RELATED மாநகர ஆயுதப்படை மைதானத்தில்...