×

376 மனுக்கள் குவிந்தன ஜனவரியில் திருமணம் நடைபெற உள்ளநிலையில் லோடு ஆட்டோ மோதி பெண் பலி

அரியலூர், டிச.16: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே சுமை ஆட்டோ மோதிய விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்ற அஞ்சலக இளம்பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமானூர் அடுத்த சன்னாவூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் மகள் ஜெனிபர்(24). அஞ்சல் நிலைய ஊழியர் நேற்று காலை இவர், தனது வீட்டிலிருந்து அஞ்சலகத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கரைவெட்டி கிராமம் அருகே சென்ற போது, எதிரே வந்த சுமை ஆட்டோ மோதியதில் பலத்த கயமடைந்த ஜெனிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திருமானூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஜெனிபரின் சடலத்தை மீட்டு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஜெனிபருக்கு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.

Tags : Ariyalur ,Thirumanur, Ariyalur district ,James' ,Jennifer ,Sannawur Elath Street ,Thirumanur ,
× RELATED அதீத பனி மூட்டத்தின்போது பாதுகாப்பான விமான சேவை அளிப்பது எப்படி?