- Gundas
- விருதுநகர்
- சந்திர பிரபு
- ராஜபாளையம்
- மாரிசெல்வம்
- மாப்பிள்ளை சுப்பையா தெரு
- Kaliraj
- மங்காபுரம் தெரு
- ராஜபாளையம் தெற்கு காவல் துறை...
விருதுநகர், டிச.16: ராஜபாளையத்தை சேர்ந்த சந்திர பிரபு என்பவரை கடந்த நவ.24ல், ராஜபாளையம், மாப்பிள்ளை சுப்பையா தெருவை சேர்ந்த மாரிச் செல்வம் மற்றும் மங்காபுரம் தெருவை சேர்ந்த காளிராஜ் ஆகியோர் கொலை செய்ய முன்றனர். இது தொடர்பாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதன் காரணமாக இவர்கள் இருவரையும் குண்டாஸில் கைது செய்ய எஸ்பி கண்ணன், கலெக்டர் சுகபுத்ராவுக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் இருவரையும் குண்டாஸில் நேற்று போலீசார் கைது செய்தனர்.
