- நேரு
- காஷ்மீர்
- யோகி ஆதித்யநாத்
- லக்னோ
- சர்தார் வல்லபாய் பட்டேல்
- உ.பி.
- முதல் அமைச்சர்
- இந்தியா
- இந்திய ஒன்றியம்
- நிசாம்ஸ்
- ஜூனாகத்
- ஹைதெராபாத்
- இந்தியா...
லக்னோ: சர்தார் வல்லபாய் படேலின் 75வது நினைவு நாளையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில்,உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில்,‘‘சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவில் 560க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்திய ஒன்றியத்துடன் இணைத்தார். இந்த நடவடிக்கையின் போது, ஜூனாகாத்,ஐதராபாத் நிஜாம்கள் இந்தியாவுடன் இணைய மறுத்து விட்டன. படேலின் ஞானத்தால் மட்டுமே ரத்தம் இல்லாத புரட்சியின் மூலம் இரண்டு சமஸ்தானங்களும் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டியிருந்தது.
காஷ்மீர் சமஸ்தானத்தின் தலைவிதி நிச்சயமற்ற நிலைமையில் இருந்தது. எனவே, பண்டிட் நேரு இந்த விஷயத்தை தன் கைகளில் எடுத்து கொண்டார். அவர் காஷ்மீரை சர்ச்சைக்குரியதாக மாற்றினார். சுதந்திரத்துக்கு பிறகும் அது இந்தியாவை தொடர்ந்து எரிச்சலூட்டியது. நேரு காரணமாக காஷ்மீரில் இருந்து தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை இந்தியா பெற்றது’’ என்றார்.
