சென்னை: கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப் பேரவை விழாவுக்கு வருவது எனக்கு பெருமைதான் என்று முத்தமிழ்ப் பேரவை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். முத்தமிழ்ப் பேரவை விருதுகள் வழங்கும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்று வருகிறேன். அடுத்த ஆண்டும் முத்தமிழ்ப் பேரவை விழாவுக்கு முதல் ஆளாக வருவேன். கலைகளை கலைஞர்களை மதித்த காரணத்தால் கலைஞராக திகழ்ந்தார் கலைஞர். தொடங்கிய நாள் முதல் தற்போது வரை முத்தமிழ்ப் பேரவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
