×

அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி

தஞ்சை: அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்ப்பாக தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி ஏற்படும். ஜனவரி 10ம் தேதி அமமுகவில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றி பெறும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது; வெற்றி பெறும் கூட்டணியில் இடம் பெறுவோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் விலகி விட்டோம். சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்ய பிப்ரவரி வரை அவகாசம் உள்ளது.

Tags : AMUGA ,T. D. ,Dinakaran ,Thanjay ,Amuka ,D. V. Dinakaran ,Thanjo ,Tamil Nadu ,
× RELATED மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித்...