விருத்தாசலம்: சென்னையில் இருந்து நேற்று திருநெல்வேலி நோக்கி வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கும்-தாழநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையே மாலை 6 மணி அளவில் சென்றபோது, திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரயிலில் அடுத்தடுத்த பெட்டிகளில் உள்ள 5 கண்ணாடிகள் உடைந்து சேதமானது. விசாரணையில், அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் கல் வீசி தாக்கியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு: 5 பெட்டிகளில் கண்ணாடி உடைப்பு
- வந்தே பாரத்
- விருத்தாச்சலம்
- பாரத்
- சென்னை
- திருநெல்வேலி
- விருத்தாசலம் ரயில் நிலையம்
- தாழநல்லூர் ரயில் நிலையம்
