தங்கம் விலை மாற்றமில்லை; வெள்ளி கிராமுக்கு ரூ.6 குறைந்தது

 

சென்னை: உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக, தங்கம் மற்றும் வெள்ளி விலை காலை, மதியம் என ஒரு நாளுக்கு இரண்டு முறை மாறுதல் அடைந்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை நேற்று வரலாறு காணாத வகையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,250க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து மாலை நேரத்திலும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.98,960க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.12,370க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்று மாலை நிலவர விலையே தொடர்கிறது. இருப்பினும் வெள்ளி விலை மட்டும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.6 குறைந்து ஒரு கிராம் ரூ.210க்கும், ஒரு கிலோ ரூ.2,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Related Stories: