×

இண்டிகோ நிறுவன அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்: டிஜிசிஏ அதிரடி நடவடிக்கை

மும்பை: இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டது தொடர்பாக நான்கு விமான செயல்பாட்டு ஆய்வாளர்களை சஸ்பெண்ட் செய்து டிஜிசிஏ நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய பணி நேர விதிமுறைகளை அமல்படுத்திய நிலையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. லட்சக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர். இந்நிலையில் நெருக்கடியில் இருந்து இண்டிகோ நிறுவனம் படிப்படியாக மீண்டு வருகின்றது. இதனிடையே நேற்று பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட விமானங்களை விமான நிறுவனம் ரத்து செய்தது.

இதனிடையே சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் மூத்த அதிகாரிகளான, ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு மேற்பார்வை செயல்பாடுகளின் ஒரு பகுதியாக பணியாற்றும் 4 மூத்த அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இண்டிகோவின் விமானங்களில் சமீபத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான இடையூறுகள் தொடர்பாக 4 விமான செயல்பாட்டு ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ போட்டி விதிமுறைகளை மீறியுள்ளதாக என்பதை வர்த்தக கண்காணிப்பு அமைப்பான இந்திய போட்டி ஆணையம் ஆய்வு செய்து வருகின்றது. இண்டிகோ மீது இதுவரை எந்த முறையான புகாரும் இல்லை. போட்டி விதிகள் தானாக முன்வந்து மீறப்பட்டுள்ளதாக என்பதை சிசிஐ ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : IndiGo ,DGCA ,Mumbai ,
× RELATED கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி...